புதிய மெகசீன் சிறைச்சாலையில் கைதியொருவரை பார்க்கச் சென்றவர் எடுத்துச் சென்ற உணவுப் பொதியிலிருந்து ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதியொருவரை பார்வையிட வந்த நபரொருவர் கொண்டு வந்த உணவுப் பொதியில் இரண்டு சிறிய பொதிகளில் சூட்சுமமாக மறைத்துவைத்து எடுத்துச் சென்ற ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் காமினி பி. திஸாநாயக்க தெரிவித்தார்.

இந்த போதைப்பொருளை கொண்டு வந்த நபர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பொரளை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதுடன், சம்பவம் தொடர்பில் மெகசின் சிறைச்சாலையினரால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here