நாட்டில் நிலவும் உப்பு பற்றாக்குறைக்கு மத்தியில் தற்போது தேங்காயின் விலையும் அதிகரித்துள்ளதாக நுகர்வோர் முன்னணி தெரிவித்துள்ளது.

இதன்படி, தேங்காய் ஒன்று 200 ரூபாவுக்கும் அதிகமான விலையில் விற்பனை செய்யப்படுவதாக அந்த முன்னணியின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துரைக்கும் போதே குறித்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

மேலும், தற்போது சந்தையில் 245 ரூபாய் முதல் 250 ரூபாய் வரையில் தேங்காய் விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here