அங்குருவதோட்ட, படகொடவில் உள்ள முதியோர் இல்லத்தில் நேற்று ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக அந்த இல்லத்தின் பொறுப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் இன்று ஹொரான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார் என காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று காலை நிலவரப்படி, குறித்த சம்பவத்தினால் ஏற்பட்ட உயிரிழப்பின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளதாக காவல்துறை மேலும் தெரிவித்துள்ளது.

முதியோர் இல்லத்தில் வசித்த 71 பேரில், ஏழு பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், 51 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

அங்குருவதோட்ட காவல்துறை மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here