மேற்கு இந்திய சினிமா பணியாளர்களது கூட்டமைப்பு (FWICE), நடிகர் ரன்வீர் சிங்குக்கு எதிராக பிறப்பித்திருந்த ஒத்துழையாமை (அவருடன் பணியாற்ற வேண்டாம் என்ற) உத்தரவை (NCD) திரும்பப் பெற்றுள்ளது.

திரைப்பட இயக்குநர் ஃபர்ஹான் அக்தரின் தயாரிப்பு நிறுவனம் தயாரித்து வந்த, ‘டோன் 3’ திரைப்படத்திலிருந்து ரன்வீர் விலகியதாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து, திரையுலக அமைப்பு அனுப்பிய தொடர்ச்சியான மனுக்களுக்கு அவர் பதிலளிக்கத் தவறியதாகக் கூறப்பட்டதை அடுத்து, FWICE முன்னதாக இந்த உத்தரவைப் பிறப்பித்திருந்தது.

இந்த அமைப்பில் இருந்து நடிகர் விலகியதால், பாரிய நிதியிலான தயாரிப்புகளுடன் தொடர்புடைய நிதிச் சிக்கல்கள் மற்றும் படப்பிடிப்பு திகதிகளில் ஏற்படும் இடையூறுகள் குறித்து தயாரிப்பாளர்கள் மற்றும் திரையுலகப் பங்குதாரர்களிடையே கவலைகள் எழுந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்தியத் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் (IMPPA) தலையீடு மற்றும் திரையுலகின் முக்கியப் பங்குதாரர்களுடனான ஆலோசனைகள் ஒரு சமரசத்திற்கு வழிவகுத்தன.

அதனை அடுத்து புறக்கணிப்பின்றி, பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண அனைத்து தரப்பினரும் ஒப்புக்கொண்டனர்.

இதற்கமைய FWICE அமைப்பு உடனடியாக தடையை விலக்கிக் கொண்டுள்ளதுடன் ரன்வீர் இப்போது தனது தற்போதைய மற்றும் எதிர்காலத் திட்டங்களில் பணியாற்றலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here