72ஆவது உலக அழகிகள் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திக் கலந்துகொள்ளும் அனுதி குணசேகர, 107 அழகிகளில் இருந்து இறுதி 20 பேருக்குள் ஒருவராக இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளார்.

இந்தியாவின் தெலுங்கானாவில் குறித்த போட்டி நடைபெற்று வருகிறது.

போட்டியின் பிரதான நிகழ்வான “ HEAD TO HEAD presentation ” பிரிவில், இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனுதி குணசேகர முன்வைத்த சமர்ப்பணம், உலகளவில் வரவேற்பைப் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

74 ஆண்டு கால உலக அழகி போட்டி வரலாற்றில் Head-to-Head Challenge பிரிவில் இறுதி சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இலங்கை போட்டியாளராக அனுதி இடம்பிடித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here