உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் டின்னில் அடைக்கப்பட்ட மீன்களுக்கு அதிகபட்ச சில்லறை விலையை விதிக்கும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

2003 ஆம் ஆண்டு நுகர்வோர் விவகார அதிகாரசபை சட்டத்தின் 20(5) பிரிவின் கீழ் வெளியிடப்பட்டுள்ள இந்த உத்தரவில், எந்தவொரு உள்நாட்டு உற்பத்தியாளர், பொதி செய்பவர், விநியோகஸ்தர் அல்லது வர்த்தகரும் குறிப்பிட்ட டின்னில் அடைக்கப்பட்ட மீன் பொருட்களை நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு விற்கவோ, விற்பனைக்கு வழங்கவோ அல்லது காட்சிப்படுத்தவோ முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவு (செப்டம்பர் 5 ஆம்) திகதி இன்று முதல் அமுலுக்கு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here