நீரிழிவு நோயாளிகள் சிலருக்கு கால் நகங்களின் விளிம்புகள் தோலுக்குள் உள்நோக்கி வளரும்.

இது அதிக வலியைக் கொடுப்பதுடன் வீக்கத்தை ஏற்படுத்தி தொற்றுக்கும் வழிவகுக்கும்.

இதனை ஓனக்கோ கிரிப்டோஸிஸ் என அழைப்பர்.

இந்த பிரச்சினை ஏற்படுவதற்கான காரணங்கள்

  • நகங்களை சரியாக வெட்டாமை
  • நகங்கள் அசாதாரணமாக வளைந்தபடி வளர்தல்
  • இறுக்கமான காலணிகள் அல்லது காலுறைகள் அணிதல்
  • அடிபடுதல்
  • அதிக பாரமான பொருள் கால் விரலில் விழுந்து அதனால் ஏற்பட்ட காயம்
  • தவறாக நிற்றல் அல்லது நடக்கும் தோரணை
  • மரபணு
  • வியர்வை
  • பூஞ்சைத் தொற்று

இதனை நிவர்த்தி செய்வதற்கான வழிமுறைகள்

  • நகம் வெட்டும் பொழுது வளைவு வரையில் செல்லாமல் நேராக வெட்ட வேண்டும்.
  • விசாலமான பாதணிகளை அணிய வேண்டும்.
  • தொற்றுக்கள் ஏற்பட்டால் அதனை தடுக்கும் வலி நிவாரணிகளைப் பயன்படுத்த வேண்டும்.
  • தினமும் கால்களை 5 தடவைகள் 20 நிமிடங்களுக்கு வெதுவெதுப்பான நீரில் ஊறவைக்க வேண்டும்.

இந்த முயற்சிகள் பலனளிக்காவிட்டால் மருத்துவரை நாடவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here