முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்றைய தினம் கையூட்டல் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க கைது செய்யப்பட்டமை தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கருத்து தொடர்பில் கையூட்டல் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இரண்டு தடவைகள் கையூட்டல் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் அவர் முன்னிலையாகியிருக்கவில்லை.

தமது சட்டத்தரணி வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பிய பின்னர் ஆணைக்குழுவில் முன்னிலையாவதாக ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்றைய தினம் பிற்பகல் 2 மணிக்கு ஆணைக்குழுவில் முன்னிலையாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here