எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீ விபத்து தொடர்பில் குறித்த கப்பலின் கெப்டன் மற்றும் கொழும்பு துறைமுக கட்டுப்பாட்டு அதிகாரி ஆகியோர் குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு வழங்கியுள்ள வாக்குமூலத்தின் பிரதிகளை, நீதிமன்றில் சமர்ப்பித்துள்ளதாக சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் கர்தினால் மெல்கம் ரஞ்சித் மற்றும் மீனவ சமூகத்தினரால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

இதன்போதே, சட்டமா அதிபர் சார்பில் நீதிமன்றில் முன்னிலையான பிரதி மன்றாடியார் நாயகம் இதனை அறிவித்துள்ளார்.

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க உத்தரவிடக்கோரி இந்த அடிப்படை உரிமை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here