Friday, May 1, 2026
No menu items!

குற்றப்புலனாய்வு திணைக்களம்

முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க குற்றப்புலனாய்வில் இன்று முன்னிலையாக வேண்டாம் என அறிவிப்பு!

முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாக வேண்டிய அவசியமில்லை என அந்த திணைக்களம் அறிவித்துள்ளது. இன்று அவர் முன்னிலையாக வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதியின் பிரித்தானிய விஜயம் தொடர்பான விசாரணைக்கு அமைய வாக்குமூலம் அளிக்க இன்று காலை 9.00 மணிக்கு குற்றப் புலனாய்வுத்...

ரணில் விக்ரமசிங்க குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலை..!!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளதாக உள்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஜனாதிபதியாக அவர் பணியாற்றிய காலப்பகுதியில் மேற்கொண்ட வெளிநாட்டு பயணங்கள் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசபந்து தென்னகோன் கைது!

முன்னாள் காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைதுசெய்யப்பட்டுள்ளார். 2022 மே 9 ஆம் திகதி காலி முகத்திடல் மற்றும் அலரி மாளிகைக்கு அருகில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். முன்னதாக இந்த சம்பவம் தொடர்பில் தாம் கைதுசெய்யப்படுவதை, தவிர்க்கும் வகையில் முன்பிணை வழங்குமாறு அவர் நீதிமன்றை...

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் அழைப்பு!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை எதிர்வரும் வெள்ளிக்கிழமை ( 22) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தி்ல் முன்னிலையாகுமாறு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது. நியூயோர்க்குக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாடு திரும்பும்போது பல்கலைக்கழக நிகழ்வுக்காக அவர் பிரித்தானியாவுக்கு சென்றமை தொடர்பாக தற்போது நடைபெற்று வரும் விசாரணைக்காக அவருக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இருந்தபோது அவரது செயலாளராக...

குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையான சாகல ரத்நாயக்க!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் முன்னாள் தலைமை அதிகாரி சாகல ரத்நாயக்க, குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இன்று முன்னிலையானார். வாக்குமூலம் அளிப்பதற்காகவே அவர் இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையானார்.  

ஈஸ்டர் தாக்குதலின் 6ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று..!

ஏப்ரல் 21 பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டு இன்றுடன் 6 ஆண்டுகள் பூர்த்தியாவதை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் இடம்பெறவுள்ளன.  2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி அன்று, கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும் சுற்றுலா விடுதிகள் உட்பட நாட்டின் 8 இடங்களில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களில் 250 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன் 407...

பிள்ளையானை 72 மணிநேரம் தடுத்து வைத்து விசாரணை..!

குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என்ற சிவநேசத்துரை சந்திரகாந்தன் 72 மணிநேரம் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்படுகின்றார். பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் அவரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று அவர் கைது செய்யப்பட்டார். கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சிவசுப்ரமணியம் ரவீந்திரநாதன்...

சி.ஐ.டியிலிருந்து வெளியேறினார் கெஹெலிய ரம்புக்வெல்ல..!

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல வாக்குமூலம் வழங்கியதன் பின்னர், குற்றப்புலனாய்வு திணைக்களத்திலிருந்து வெளியேறினார். தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசிகள், நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் இன்று முற்பகல் குறித்த திணைக்களத்தில் முன்னிலையானார். இதனையடுத்து, அவர் வாக்குமூலம் வழங்கியதன் பின்னர் குற்றப்புலனாய்வு திணைக்களத்திலிருந்து வெளியேறியதாக தெரிவிக்கப்படுள்ளார்.

சி.ஐ.டியினால் பிள்ளையான் கைது..!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என்ற சிவநேசத்துரை சந்திரகாந்தன் கைது செய்யப்பட்டுள்ளார். மட்டக்களப்பிலுள்ள அவரது அலுவலகத்தில் வைத்து குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். நபர் ஒருவர் கடத்தப்பட்டு காணாமல் போனமை குறித்த விசாரணையின் போது அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்தநிலையில் அவர் இன்று அதிகாலை கொழும்பு குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குப் பொறுப்பானவர்களை வெளிப்படுத்த முயற்சிகள்; ஜனாதிபதி!

2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குப் பொறுப்பானவர்களை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதிக்கு முன்னர் வெளிப்படுத்த முயற்சிகள் நடைபெற்று வருவதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். தெய்யந்தர பகுதியில் தற்போது நடைபெற்று வரும் பொதுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார். தாக்குதல்களுக்குப் பின்னால் இருப்பதாகக் கூறப்படும் குழுவை அம்பலப்படுத்த குற்றப்புலனாய்வு...
- Advertisement -spot_img

Latest News

ஹட்டன்-டயகம வீதியில் பேருந்து விபத்து; ஒருவர் உயிரிழப்பு 34 பேருக்கு காயம்

ஹட்டன்-டயகம வீதியில், மற்றொரு வாகனத்திற்கு வழிவிட முயன்ற பேருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த அனர்த்தத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்ததோடு, 2 சிறு குழந்தைகள் உட்பட 34...
- Advertisement -spot_img