எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்க இலங்கைக்கு திரும்ப முயற்சிக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள் குறித்து தேசிய மக்கள் சக்தியின் (NPP) நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் கவலை வெளியிட்டுள்ளார்.
பல இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீண்டும் தேர்தலுக்கு வர ஆர்வமாக உள்ளதாகவும், ஆனால் காலாவதியான கடவுச்சீட்டுகளை வைத்திருப்பவர்கள் அவற்றை புதுப்பிப்பதில் சிக்கல்களை எதிர்கொள்வதாகவும் செய்தியாளர் சந்திப்பின் போது அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த விடயங்கள் தீவிரமடைய அரசாங்கம் வேண்டுமென்றே அனுமதித்திருக்கலாம் என பாராளுமன்ற உறுப்பினர் சந்தேகம் வெளியிட்டுள்ளார். ஊழல் பேரங்கள் தான் இந்த பிரச்சனைகளுக்கு முக்கிய காரணம் என்றும் அவர் கூறியுள்ளார்.








