பாதாள உலகம் எதிர்க்கட்சிகளுக்கு அடைக்கலம் தருவதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குற்றம் சுமத்தியுள்ளார்.
யுக்திய நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததை சுட்டிக்காட்டிய அமைச்சர், இதன் காரணமாகவே பொலிஸ் மா அதிபரை பதவி நீக்குமாறு எதிர்க்கட்சிகள் வாதாடி வருவதாகவும் வலியுறுத்தியுள்ளார்.
பொலிஸ் மா அதிபர் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் அமைச்சர்கள் பலர் நேற்று (25) பாராளுமன்றத்தில் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.







