நீர்கொழும்பு கட்டான – பொலவலன  பகுதியில் நேற்று சம்பவித்த கோர  விபத்தில் 2 இளைஞர்கள் உயிரிழந்த சம்பவத்தின் பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

வெளியான காட்சிகளில், நீர்கொழும்பு – மினுவங்கொடை வீதியில் உள்ள கொள்கலன் முற்றத்திற்குள் பின்னோக்கி சென்று கொண்டிருந்த பிரைம் மூவர் ரக வாகனத்தின் டிரெய்லருடன், அதிவேகமாக வந்த இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதுகின்றமை தெரியவந்துள்ளது.

இந்த மோதலில் 18 மற்றும் 19 வயதுடைய இரண்டு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

விபத்தை அடுத்து, அங்கு கூடியிருந்த ஒரு குழுவினர் அந்த பிரைம் மூவர் வாகனத்திற்கு தீ வைத்தனர். இதனை அடுத்து மாநகர சபை தீயணைப்பு வீர்கள் மற்றும் கட்டான பொலிஸார் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

தற்போது விபத்து மற்றும் வாகனத்திற்கு தீ வைக்கப்பட்டமை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

உயிரிழந்தவர்கள் நீர்கொழும்பை  சேர்ந்த 18 வயதுடைய தலிஷா நிம்னத் சிரிவர்தன மற்றும் 19 வயதுடைய கவிந்து ஹசன் சோமதிலக்க ஆகியோர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here