ஜேர்மனியில் ஏற்பட்டுள்ள அதிக வெப்பத்தின் காரணமாக இந்தாண்டு இதுவரையில் சுமார் 9,800 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டின் ஆர்.கே.ஐ சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

இன்று (30) வெளியிடப்பட்ட இந்த அறிக்கையின்படி, உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் 75 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் வாராந்த சராசரி வெப்பநிலை செல்சியஸ் 20 டிகிரிக்கு மேல் அதிகரித்ததன் காரணமாக, இவ்வாறு மரணங்கள் ஏற்படும் சதவீதம் வேகமாக அதிகரித்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், எதிர்வரும் காலங்களில் வெப்பநிலை செல்சியஸ் 40 டிகிரி எல்லையை விட அதிகமாக கூடும் என்பதால், மரண எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என சுகாதார துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here