மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள குறித்த திணைக்களம், சில இடங்களில் 100 மில்லி மீற்றருக்கும் மேல் கனமழை பெய்யக்கூடும் எனவும் குறிப்பிட்டுள்ளது.
வடமத்திய மாகாணத்தில் சிறிதளவு மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கையின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக *வெப்பமான வானிலை* நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.







