இன்று முதல் அமுலாகும் வகையில் இலங்கை கனிய வள கூட்டுத்தாபனத்தின் எரிபொருட்களின் சில்லறை விற்பனை விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்படி, ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை, 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.

இதன்படி, அதன் புதிய விலை 299 ரூபாவாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை, 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.

அதன் புதிய விலை 361 ரூபாவாகும்.

இதேவேளை, ஒட்டோ டீசல், சுப்பர் டீசல் மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலைகளை மாற்றமின்றி தொடர இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here