நாட்டின் எரிபொருள் சந்தை பிரிக்கப்பட்டுள்ள விதத்தின் காரணமாக லங்கா IOC நிறுவனமும் சினோபெக் நிறுவனமும் எரிபொருள் விலையை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் கலாநிதி நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
இன்று (27) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
கடந்த அரசாங்கங்கள் நாட்டில் உள்ள டொலர் கையிருப்பை பாதுகாப்பதற்காக நாட்டின் எண்ணெய் சந்தையின் மேலும் சில பகுதிகளை அவர்களுக்கு வழங்கியுள்ளதாகவும், அதன்படி தற்போது அரசாங்கம் எரிபொருள் விலையை முன்வைத்தால் அதிகரிக்கும் விலையை அரசாங்கம் தாங்க வேண்டியிருக்கும் என்றும் அமைச்சர் கூறினார்.
மத்திய கிழக்கில் எரிபொருள் விலை வேகமாக அதிகரித்து வரும் நேரத்தில் அந்த நிறுவனங்கள் எரிபொருள் விநியோகத்தை கட்டுப்படுத்தியுள்ள போதிலும், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தற்போதைய நிலைமையில் முடிந்தவரை அதிகபட்சமாக எரிபொருள் விநியோகத்தை மேற்கொண்டு வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.
மேலும் தற்போது இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு எரிபொருள் நிரப்பு நிலையங்கள் இல்லாத இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கூறிய அமைச்சர், தற்போது அந்த இடங்களில் எரிபொருள் நிரப்பு நிலையங்களை நிர்மாணிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் தெரிவித்தார்.








