நாட்டில் அண்மையில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையுடன் வெள்ளம் ஏற்பட்ட பகுதிகளில் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இரத்தினபுரி, காலி, களுத்துறை, அம்பாறை, குருநாகல், கேகாலை மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்கள் அதிக ஆபத்துள்ள பிரதேசங்களாக இனங்காணப்பட்டுள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும், இந்த ஆண்டில் சுமார் பத்தாயிரம் எலிக்காய்ச்சல் நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன் 120 முதல் 200 பேர் எலிக்காய்ச்சலால் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here