Sunday, July 26, 2026
No menu items!

எலிக்காய்ச்சல்

நாட்டில் எலிக்காய்ச்சல் தீவிரம் – பொதுமக்களுக்கு வைத்திய நிபுணர் எச்சரிக்கை!

நாட்டில் எலிக்காய்ச்சல் மீண்டும் தீவிரமடைந்து வருவதாக சீமாட்டி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் சிறுவர் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் டாக்டர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். இன்று (11) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு, இந்த நிலைமை குறித்து அவர் எச்சரிக்கை விடுத்தார். எலிக்காய்ச்சல் பெரும்பாலும் சேற்று நீரினால் பரவுகின்றது. பாடசாலைகள் தற்போது விடுமுறையில் இருப்பதால், சிறுவர்கள்...

நாட்டில் அதிகரித்து வரும் எலிக்காய்ச்சல் நோயாளர்களின் எண்ணிக்கை!

நாடு முழுவதும் எலிக்காய்ச்சல் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இரத்தினபுரி, குருநாகல், கேகாலை, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களிலிருந்தே அதிக நோயாளிகள் பதிவாகியுள்ளதாக தொற்றுநோயியல் பிரிவின் வைத்திய நிபுணர் துஷானி தபரேரா தெரிவித்தார். சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே விசேட வைத்திய...

எலிக்காய்ச்சலால் இருவர் உயிரிழப்பு – அச்சத்தில் மக்கள்..!

கிளிநொச்சியில் எலிக்காய்ச்சல் (Leptospirosis) எனச் சந்தேகிக்கப்படும் நோய் காரணமாகக் கடந்த இரண்டு வாரங்களில் இருவர் உயிரிழந்துள்ளதாகப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் த.வினோதன் தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். கிளிநொச்சி - முழங்காவில் மற்றும் கண்டாவளை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இருவரே உயிரிழந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே காய்ச்சல், தசைநோவு,...

வவுனியாவில் எலிக்காய்ச்சல் தீவிரம்..!

கடந்த வருடத்தில் வவுனியா மாவட்டத்தில் மாத்திரம் எலிக்காய்ச்சல் காரணமாக 41 பேர் பாதிப்புக்குள்ளானதாக வவுனியா பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை தெரிவித்துள்ளது. வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினால் முன்னெடுக்கப்பட்ட, எலிக்காய்ச்சலை தடுக்கும் வகையிலான விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்டத்தின் போது இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது. எலிக்காய்ச்சல் காரணமாக பாதிக்கப்பட்டிருந்த 41 பேரும் கடந்த வருடத்தின் பெரும்போகம்...

முடிவுக்கு வராத எலிக்காய்ச்சல் – மேலும் இருவர் உயிரிழப்பு..!

எலிக்காய்ச்சல் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்றுமுன்தினம் (02.01.2025) இரண்டு மரணங்கள் சம்பவித்துள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ. கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். நேற்றையதினம் அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாண மாவட்டத்திலே எலிக்காய்ச்சல் நோய் காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் என...

யாழில் எலிக் காய்ச்சலை தொடர்ந்து தீவிரமாகும் டெங்கு நோய்..!

யாழ். மாவட்டத்தில் டிசம்பர் மாதத்தில் மாத்திரம் இதுவரை 91 பேர் டெங்குத் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் கேதீஸ்வரன் தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணத்தில் அண்மையில் நிலவிய சீரற்ற காலநிலையைத் தொடர்ந்து, டெங்குத் தொற்று மிகையாக அதிகரித்து வருகின்றது. இதன்படி, நவம்பர் மாதத்தில் 134 பேரும், டிசம்பர் மாதத்தில் 91 பேரும்...

இந்த ஆண்டு எலிக்காய்ச்சலால் 200 பேர் உயிரிழப்பு..!!

வடமாகாணத்தில் உள்ள பாலூட்டிகளின் இரத்த மாதிரிகளை சேகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. வட மாகாணத்தில் அண்மைய நாட்களில் பதிவாகியுள்ள எலிக்காய்ச்சல் தொடர்பான விசாரணைகள் தொடர்பில் இந்த மாதிரிகள் எடுக்கப்பட்டதாக அதன் தொற்றுநோய் பிரிவு தெரிவித்துள்ளது. குறித்த மாதிரிகள் கால்நடை மருத்துவ திணைக்களத்தின் ஆய்வகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த சில தினங்களில் யாழ்.மாவட்டத்தில்...

அசுர வேகத்தில் பரவும் எலிக்காய்ச்சல் – 121 பேர் பாதிப்பு..!

யாழ் மாவட்டத்தில் எலிக்காய்ச்சல் நோய் காரணமாக இதுவரை 121 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போது பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 32 பேரும் யாழ் போதனா வைத்தியசாலையில் 8 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணிநேரத்தில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 6...

விலங்குகளுக்கும் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்..!

வடக்கு மாகாணத்தில் தற்போது பரவியுள்ள எலிக்காய்ச்சல் நோயானது மனிதர்கள் உள்ளிட்ட பல்வேறு விலங்குகளிலும் ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக வடக்கு மாகாண கால்நடை சுகாதார உற்பத்தி திணைக்களத்தின் மாகாண பணிப்பாளர் வைத்தியர் எஸ்.வசீகரன் தெரிவித்துள்ளார். எலிக்காய்ச்சல் தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடக சந்திப்பு திருநெல்வேலியில் உள்ள கால்நடை சுகாதார உற்பத்தி திணைக்களத்தில் இன்று காலை இடம்பெற்ற போதே அவர்...

மக்களை அச்சுறுத்தும் எலிக்காய்ச்சல் – 85 பேர் பாதிப்பு..!

யாழ் மாவட்டத்தில் எலிக் காய்ச்சலினால் 85 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர் என யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் நேற்று (17.12.2024) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், தற்போது பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 21 பேரும் யாழ் போதனா வைத்தியசாலயில் 11...
- Advertisement -spot_img

Latest News

நாமலின் திருமண நிகழ்வு; 2.68 மில்லியன் மின் கட்டண வழக்கு ஒத்திவைப்பு

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் திருமணத்தின் போது பயன்படுத்தப்பட்ட மின்சாரத்துக்கான கட்டணம் 2.68 மில்லியன் ரூபாய்  செலுத்தப்படாமை தொடர்பான அடிப்படை உரிமை மனு மீதான விசாரணையை...
- Advertisement -spot_img