நாட்டில் தற்போது நிலவும் எல்நினோ நிலைமையின் காரணமாக தீவைச் சுற்றியுள்ள கடலின் வெப்பநிலை மேலும் 1 செல்சியஸ் பாகையால் அதிகரித்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எல் நினோவின் தாக்கத்துடன் வரவிருக்கும் 8 மாத காலம் இலங்கைக்கு மிகவும் முக்கியமானதாக அமைந்துள்ளது.

இதற்கிடையில், பசிபிக் பெருங்கடலின் வெப்பநிலை 3 செல்சியஸ் பாகையால் அதிகரித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இந்த நிலைமையின் காரணமாக பகல் நேர வெப்பநிலையுடன் இரவு நேர வெப்பநிலையும் அதிகமாக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த எல் நினோ நிகழ்வின் தாக்கத்தின் காரணமாக நாட்டின் பல மாவட்டங்களில் கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ளது.

எதிர்வரும் செப்டம்பர் மாதம் முடியும் வரை குறிப்பிட்ட மாகாணங்களுக்கு மழை கிடைக்காது எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிக்கிறது.

எல் நினோவின் தாக்கத்தின் காரணமாக தீவின் 7 மாவட்டங்களை பாதித்துள்ள கடுமையான வறண்ட வானிலையால், நீரை அடிப்படையாகக் கொண்ட பல வாழ்வாதாரங்கள் தற்போது நேரடி மற்றும் மறைமுக தாக்கங்களை எதிர்கொண்டு வருகின்றன.

இதேவேளை நிலவும் நிலைமையின் கீழ் நீர்தேக்கங்கள் மற்றும் குளங்கள் மூலம் குடிநீர் தொடர்ந்து வழங்கப்பட்டாலும், விவசாயத்திற்கான நீர் விநியோகம் கட்டுப்படுத்தப்பட வேண்டியிருக்கும் என இத்தகைய பின்னணியில், நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த வானிலை மாற்றம் காரணமாக 7 மாவட்டங்களைச் சேர்ந்த 22 பிரதேச செயலக பிரிவுகளைச் சேர்ந்த 81,605 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here