ஏற்றுமதித் துறையின் தொழில்களுக்காக இதுவரை அமுலில் உள்ள ஐந்து நாள் வேலை வாரத்தை தொழில் ஆணையாளரின் அறிவுறுத்தல்கள் மற்றும் ஒப்புதலுக்கு உட்பட்டு எதிர்வரும் 6 மாதங்களுக்கு நீடிக்க தொழிலாளர் ஆலோசனைக் குழு அனுமதியளித்துள்ளது.
2023 ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதத்தின் பின்னர் ,அந்த குழு அண்மையில் கூடிய போதே குறித்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஐந்து நாள் வேலை வாரத்தை அமல்படுத்தும் போது எழும் பிரச்சினைகளை மீளாய்வு செய்வதற்காக முதலாளிமார், சேவையாளர்கள் மற்றும் அரசாங்கம் ஆகிய மூன்று தரப்பினரிடமிருந்தும் தலா இரண்டு பிரதிநிதிகளைக் கொண்ட உப குழுவை நியமிக்கவும் இதன்போது தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.








