நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.எல் பீரிஸ் தலைமையிலான சுதந்திர மக்கள் சபையின் 6 பேர் இன்றைய தினம் ஐக்கிய மக்கள் சக்தியின் புதிய கூட்டணியில் இணைந்து கொண்டுள்ளதாக கைசாத்திட்டுள்ளனர்.

இதன்படி, ஜி.எல் பீரிஸ், டிலான் பெரேரா, நாலக கொடஹேவா, உபுல் கலப்பத்தி, வசந்த யாப்பா பண்டார மற்றும் கே.பி.எஸ் குமாரஸ்ரீ ஆகியோரே இவ்வாறு இணைந்து கொண்டுள்ளனர்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் தலைமையில், ஐக்கிய மக்கள் சக்தியின் புதிய கூட்டணி ஆரம்பிக்கப்பட்டது.

இதன் ஆரம்ப நிகழ்வுகள் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

தற்போது கூட்டணியில் இணைத்துக்கொள்வதற்காக 25 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடப்பட்டுள்ள நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.எல் பீரிஸ் தலைமையிலான சுதந்திர மக்கள் சபையின் 6 பேர் இன்றைய தினம் ஐக்கிய மக்கள் சக்தியின் புதிய கூட்டணியில் இணைந்து கொண்டுள்ளதாக கைசாத்திட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here