2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மகளிருக்கான இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) ஏலத்தில் இலங்கை வீராங்கனை தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணித் தலைவி சமரி அத்தபத்து என்பவரே இவ்வாறுதெரிவு செய்யப்பட்டுள்ளார்.

2023 ஆம் ஆண்டு நடைபெற்ற அவுஸ்திரேலிய பிக் பாஷ் மகளிர் போட்டியில் சமரி அத்தபத்து சிறப்பாக விளையாடியதன் காரணமாகவே இந்த வாய்ப்பை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரின் ஆரம்ப விலையாக 30 இலட்சம் ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இம்மாதம் 9ம் திகதி மகளிருக்கான ஐ.பி.எல். போட்டி ஏலம் மும்பையில் நடைபெற உள்ளது.

குறித்த ஏலத்தில் 104 இந்திய வீராங்கனைகளும், 61 வெளிநாட்டு வீராங்கனைகளும் இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here