தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏ 35 பிரதான வீதியில் பயணித்த கப் ரக வாகனத்தை சிறப்பு அதிரடி படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக இன்று (13.03.2025) சோதனையிட்ட பொழுது 05 கிராம் 720 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதுடன் சந்தேக நபர் ஒருவரும் அவர் பயன்படுத்திய கப்ரக வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.

நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக தர்மபுரம் பொலிஸ் நிலையத்தில் தடையப் பொருட்கள் மற்றும் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை ஒப்படைத்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக தர்மபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருவதுடன் சந்தேக நபரை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
[கிளிநொச்சி நிருபர் – ஆனந்தன்]








