இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 46 ஆவது போட்டியில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் டெல்லி கெப்பிட்டல்ஸ் அணிகள் மோதின.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 162 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

இதனையடுத்து 163 எனும் வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 18.3 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றி இலக்கை கடந்தது.

இதற்கமைய புள்ளிப்பட்டியலில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதலிடத்திற்கு முன்னேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here