ஓடும் பஸ்ஸில் இருந்து பெண் ஒருவரை கீழே தள்ளிவிட்டுக் காயப்படுத்தியதாகக் கூறப்படும் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தம்புள்ளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வெலிகந்த சிங்கபுர பிரதேசத்தில் வசிக்கும் 24 வயதுடைய திருமணமான நபரொருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

சந்தேக நபரும் காயமடைந்த பெண்ணும் நீண்ட காலமாகத் தகாத உறவில் ஈடுபட்டு வந்துள்ள நிலையில் இருவரும் பொலன்னறுவையில் உள்ள பஸ் தரிப்பிடத்தில் வைத்து கொழும்பு நோக்கிப் பயணித்த தனியார் பஸ் ஒன்றில் ஏறியுள்ளனர்.

இதன்போது, சந்தேக நபரும் காயமடைந்த பெண்ணும் பஸ்ஸிற்குள் வைத்து தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

கோபமடைந்த சந்தேக நபர் காயமடைந்த பெண்ணை ஓடும் பஸ்ஸில் இருந்து கீழே தள்ளிவிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்த பெண் தம்புள்ளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here