மொனராகலை, கொனகங்ஆர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் கஞ்சா செடிகளுடன் இரண்டு சந்தேக நபர்கள் புத்தல பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் நேற்று (25.10.2024) மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

புத்தல பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மித்தெனிய மற்றும் பதலங்கல ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 42 மற்றும் 57 வயதுடைய இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து 310,000 கஞ்சா செடிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதனையடுத்து, சந்தேக நபர்கள் இருவரும் மேலதிக விசாரணைகளுக்காக கொனகங்ஆர பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொனகங்ஆர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here