#Arrested #Police #Crime #Justice #LawEnforcement #CriminalJustice #Incarceration #Prison #LegalSystem #ArrestedDevelopment
உள்நாட்டுச்செய்திகள்
கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது…!
5 கிலோவுக்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மலேசியாவில் இருந்து இலங்கைக்கு வந்த நபரிடமிருந்து பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள், 5.26 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருளை கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 51 வயதுடைய கொத்தடுவ பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபரை ஏற்றிச்...
உள்நாட்டுச்செய்திகள்
மஹியங்கனையில் 1050 கஞ்சா செடிகளுடன் ஒருவர் கைது…!
மஹியங்கனை 50ஆம் கட்டை உக்வகாவ பகுதியில் பயிரிடப்பட்டிருந்த 1050 கஞ்சா செடிகளும் ஒரு கிலோ 500 கிராம் காய்ந்த கஞ்சாவுடனும் ஒருவர் நேற்று சனிக்கிழமை (26.10.2024) மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மஹியங்கனை போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய, பணம் கொடுத்து கஞ்சா கொள்வனவு செய்வதற்காக மாறுவேடத்தில் சென்ற...
உள்நாட்டுச்செய்திகள்
உள்நாட்டுத் துப்பாக்கிகளுடன் இருவர் கைது…!
மாத்தளை, கலேவெல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போகஹயாய பகுதியில் 02 உள்நாட்டுத் துப்பாக்கிகளுடன் இரண்டு சந்தேக நபர்கள் கலேவெல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கலேவெல பொலிஸாருக்குக் கிடைத்த இரகசிய தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் மாத்தளை, வஹகோட்டை பிரதேசத்தை சேர்ந்த 40 மற்றும் 53 வயதுடையவர்கள் ஆவர்.
இது தொடர்பான மேலதிக...
உள்நாட்டுச்செய்திகள்
விசா இன்றி நாட்டில் தங்கியிருந்த ரஷ்ய பிரஜைகள் கைது…!
விசா இன்றி சட்டவிரோதமான முறையில் நாட்டில் தங்கியிருந்த வௌிநாட்டு தம்பதியை கண்டி சுற்றுலா பொலிஸ் பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
கண்டி சுற்றுலா பொலிஸ் பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைவாக ஹந்தான பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 39 மற்றும் 32 வயதுடை ரஷ்ய...
உள்நாட்டுச்செய்திகள்
சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வு; இருவர் கைது…!
சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வு நடவடிக்கைகளில் ஈடுபட்ட இருவரை பொகவந்தலாவ பொலிஸார் நேற்று (26.10.2024) கைது செய்துள்ளனர்.
ஹட்டன், பொகவந்தலாவ, டின்சின் பிரதேசத்தில் அனுமதி பத்திரங்களின்றி, மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேகநபர்கள் இருவரும் 46 மற்றும் 48 வயதுடையவர்கள் என பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ பொலிஸார்...
உள்நாட்டுச்செய்திகள்
கஞ்சா செடிகளுடன் இருவர் கைது…!
மொனராகலை, கொனகங்ஆர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் கஞ்சா செடிகளுடன் இரண்டு சந்தேக நபர்கள் புத்தல பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் நேற்று (25.10.2024) மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
புத்தல பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மித்தெனிய மற்றும் பதலங்கல ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 42 மற்றும் 57...
உள்நாட்டுச்செய்திகள்
சட்டவிரோத மதுபானம் மற்றும் கோடாவுடன் இளைஞன் கைது…!
களுத்துறை, வாதுவை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பொத்துப்பிட்டிய பிரதேசத்தில் சட்டவிரோத மதுபானம் மற்றும் கோடாவுடன் இளைஞன் ஒருவன் நேற்று வெள்ளிக்கிழமை (25.10.2024) கைது செய்யப்பட்டுள்ளதாக வாதுவை பொலிஸார் தெரிவித்தனர்.
வாதுவை பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வாதுவை பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞனே கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட...
உள்நாட்டுச்செய்திகள்
நபர் ஒருவரை பலமாக தாக்கியதாக கூறப்படும் பொலிஸ் பரிசோதகரை கைது செய்ய நடவடிக்கை…!
நபர் ஒருவரை பலமாக தாக்கி காயப்படுத்தியதாக கூறப்படும் பொலிஸ் பரிசோதகரை கைது செய்வதற்கு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
குடும்ப தகராறு காரணமாக பெண் ஒருவர் தனது கணவருக்கு எதிராக குளியாப்பிட்டிய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.
இந்நிலையில், குளியாப்பிட்டிய பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் பரிசோதகர் ஒருவர் இது தொடர்பான முறைப்பாட்டை பெண்கள் மற்றும் சிறுவர் பணியகத்திற்கு அனுப்பி வைத்துள்ளார்.
பின்னர்,...
உள்நாட்டுச்செய்திகள்
யாழில் கஞ்சாவுடன் ஒருவர் கைது…!
யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் லூஸன் சூரிய பண்டாரவின் கீழ் இயங்கும் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று வெள்ளிக்கிழமை (25.10.2024) சந்தேகநபர் ஒருவர் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் - அராலி வீதி, பொம்மைவெளி பகுதியில் சந்தேகத்தின் கீழ் கைது செய்யப்பட்ட குறித்த நபரிடம் 7 கிராம்...
உள்நாட்டுச்செய்திகள்
மஹமோதர கடற்கரை பகுதியிலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்பு…!
காலி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மஹமோதர கடற்கரை பகுதியிலிருந்து வெள்ளிக்கிழமை (25.10.2024) பிற்பகல் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக காலி பொலிஸார் தெரிவித்தனர்.
60 வயது மதிக்கத்தக்க 05 அடி 03 அங்குலம் உயரமுடைய நபரொருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலமாக மீட்கப்பட்டவர் தொடர்பில் இதுவரை எந்த வித தகவல்களும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
சடலமானது பிரேதப் பரிசோதனைக்காக கராப்பிட்டிய...
Latest News
டீசல் ஒரு பெரலுக்கு 286 டொலர்கள் செலுத்தப்பட்டது; பெட்ரோலிய கூட்டுத்தாபனம்
டீசல் ஒரு பெரலுக்கு $286 செலுத்தியதாக ஏற்று கொண்டுள்ள இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம், இது சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளுக்கு இயல்பான விலையாகும் எனவும் அதிக விலை நிர்ணயம்...


