தணமல்வில ஹம்பேகமுவ பகுதியில் பொலிசார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது 50 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதிகொண்ட கஞ்சா செடி தொகையுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக உள்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த சுற்றிவளைப்பில் அங்கு வளர்க்கப்பட்டிருந்த கஞ்சா செடிகளே இவ்வாறு அடையாளம் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அதனையடுத்து, பொலிஸார் அவற்றை முற்றாக தீயிட்டு அழிப்பதற்கு நடவடிக்கை எடுத்ததோடு சந்தேக நபரை வெல்லவாய நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.








