கோட்டை மத்திய பேருந்து நிலையத்தின் பொறியியல் பிரிவு மேம்படுத்தப்பட்ட உட்கட்டமைப்புடன் நேற்று 04ம் திகதி அதிகாரப்பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
இலங்கையின் பொதுப் போக்குவரத்து சேவையை வலுப்படுத்தும் முக்கியமான முன்னேற்றமாக இது பார்க்கப்படுகிறது.
“க்ளீன் ஶ்ரீலங்கா” தேசிய திட்டத்தின் கீழ் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டது. இலங்கை விமானப்படையினர் இதற்காக உழைத்துள்ளதுடன் தொழில்நுட்ப சேவைகளையும் வழங்கி உள்ளனர்.
இது குறித்து போக்குவரத்து பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன கூறியிருப்பதாவது,
1. பொறியியல் தொழில்நுட்பவியலாளர்களுக்கு பாதுகாப்பான, சுத்தமான மற்றும் திறமையான பணிச்சூழலை உருவாக்குதல்.
2. முறையான பேருந்து பராமரிப்பு மற்றும் திருத்தங்களுக்கான உட்கட்டமைப்பை மேம்படுத்துதல்
3. தினசரி பரிசோதனை மற்றும் சேவைகளுக்கு தேவையான வசதிகளை நவீனமயமாக்குதல்
4. பேருந்துகளின் சேவைகளின் தயார்நிலை மற்றும் நம்பகத்தன்மையை அதிகரித்தல்
5.பயணிகளுக்கு பாதுகாப்பான, தரமான மற்றும் நம்பகமான போக்குவரத்து சேவையை தொடர்ந்து வழங்குதல் என தெரிவித்துள்ளார்.
அத்துடன் அரச நிறுவனங்களுக்கிடையேயான ஒத்துழைப்புக்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என்றும், திட்டத்தை திறம்பட நிறைவு செய்வதில் இலங்கை விமானப்படையின் பங்களிப்பு முக்கியமானது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
மேம்படுத்தப்பட்ட இந்த பிரிவு பேருந்து சேவைகளின் ஒட்டுமொத்த நம்பகத்தன்மையை மேம்படுத்தும் என்றும், பயணிகள் மேலும் நம்பகமான போக்குவரத்து சேவையை பெறுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
(படம்: AI)








