நிலவும் கடும் மழை காரணமாக வெளியிடப்பட்டிருந்த நிலச்சரிவு முன்னறிவிப்பு தகவலை புதுப்பிக்க தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி, கண்டி, கேகாலை, நுவரெலியா ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள சில பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு வழங்கப்பட்டிருந்த நிலச்சரிவு சிவப்பு அறிவிப்புகள் நீக்கப்பட்டுள்ளன.

அத்துடன் இந்த நிலச்சரிவு முன்னறிவிப்பு இன்று 05.08.2026 காலை 9.00 மணி முதல் நாளை 06.08.2026 காலை 9.00 மணி வரை செல்லுபடியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கண்டி மாவட்டம், உடபலாத்த, தொலுவ, மெதும்பர, தெல்தொட, பன்வில, பஸ்பாகே கோரலே, கங்க இஹல கோரலே மற்றும் உடுதும்பர எச்சரிக்கை நிலை 2 – அதாவது விழிப்புடன் இருக்குமாறு அம்பர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கேகாலை மாவட்டம்,அரணாயக்க, தெரணியகல, புலத்கொகுபிட்டிய, தெஹியோவிட்ட மற்றும் யட்டியாந்தோட்ட ,

நுவரெலியா மாவட்டம்: நுவரெலியா, கொத்மலை கிழக்கு, கொத்மலை மேற்கு, அம்பகமுவ, நோர்வுட் மற்றும் தலவாக்கலை

இரத்தினபுரி மாவட்டம்: ஒப்பநாயக்க, இம்புல்பே மற்றும் இரத்தினபுரி ஆகியவற்றுக்கும் எச்சரிக்கை நிலை இரண்டின் கீழ்  அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையே கேகாலை மாவட்டம்: கேகாலை

நுவரெலியா மாவட்டம்: ஹங்குரன்கெத

இரத்தினபுரி மாவட்டம்: நிவிதிக்கல மற்றும் குருவிட்ட ஆகிய பகுதிகளுக்கு எச்சரிக்கை நிலை 1 – அதாவது அவதானமாக இருக்குமாறு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆபத்தான பகுதிகளில் உள்ள மக்கள் நிலச்சரிவுக்கான முன்னறிகுறிகள் குறித்து அதிக கவனம் செலுத்துமாறும், அதிகாரிகளின் அறிவுறுத்தல்களை பின்பற்றுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here