பெருந்தோட்ட சமூக உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

இன்று (22.11.2024) காலை காலை 9:30 மணியளவில் செத் சிரிபாய 8வது மாடியில் அமைந்துள்ள அமைச்சின் கட்டிட தொகுதியில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

இந்த நிகழ்வில்  பெருந்தோட்ட சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்தவித்யாரத்ன, பிரதி  தொழில்  அமைச்சர் மஹிந்த ஜெயசிங்க மற்றும் அமைச்சின் செயலாளர்  பிரபாத் சந்திரதிலக்க ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

சுந்தரலிங்கம் பிரதீப் ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் இரத்தினபுரி மாவட்டத்தில் மலையகத்தமிழ் மக்களை பிரதிநிதித்துவபடுத்தி போட்டியிட்டிருந்தார்.

இவர் மாவட்டத்தில் 112,711 வாக்குகளை பெற்று இரண்டாவது அதிகூடிய விருப்பு வாக்குகளையும் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here