இந்தியாவிற்கு கடல் வழியாக செல்ல முயன்ற பெண் ஒருவர் உட்பட 13 பேர், இந்தியாவில் இருந்து மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்ட பின்னர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பந்தப்பட்ட குழு கடல் வழியாக இந்தியாவிற்கு செல்ல முயற்சித்த நிலையில், இந்திய சுங்க அதிகாரிகள் அவர்களை மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கமைய, நேற்று (06) குறித்த சந்தேகநபர்கள் இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் தங்கள் கட்டுப்பாட்டில் எடுக்கப்பட்டு, மேலதிக விசாரணைகளுக்காக காங்கேசன்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் கருங்கோடித்தீவு, மாம்பிட்டிய, மதவாச்சி, ஹல்தும்முல்ல, வெல்லவாய, மொனராகலை, மாவடிச்சேனை, பலாங்கொடை, திருகோணமலை, பதுளை மற்றும் பொத்துவில் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

காங்கேசன்துறை பொலிஸார் சந்தேகநபர்களிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், அவர்களை இன்று (07) நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தவுள்ளனர்.

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here