கட்டுநாயக்க அதிவேக வீதியில் இருந்து துறைமுக வீதிக்கு நுழையும் இடத்தில் இங்குருகொட சந்திக்கு அருகில், பாரவூர்தி ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ் விபத்து இன்று சனிக்கிழமை (22/02/2025) இடம்பெற்றுள்ளது.

இவ் விபத்தில் காயமடைந்த சாரதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பாரவூர்தி வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி அருகில் உள்ள கால்வாயில் வீழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here