Sunday, May 10, 2026
No menu items!

பாரவூர்தி

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கோரவிபத்து: ஒருவர் பலி ஏழு பேர் காயம்!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் நேற்று நள்ளிரவு மூன்று சிறுவர்கள் உட்பட எட்டு பேரை ஏற்றிச் சென்ற சிற்றூர்தி ஒன்று , பாரவூர்தியுடன் மோதியதில் பெண் ஒருவர் உயிரிழந்தார். மேலும் ஏழு பேர் காயமடைந்துள்ளதாக தெற்கு அதிவேக நெடுஞ்சாலை போக்குவரத்து காவல்துறையினர் தெரிவித்தனர். உயிரிழந்த பெண் தவலமவில் பகுதியைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. இஸ்ரேலில் பணிபுரிந்த ஒருவரை இன்று நாட்டிக்கு...

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பாரவூர்தி விபத்து; மூவர் மருத்துவமனையில்!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் குருந்துகஹஹெதெக்ம பகுதியில் பாரவூர்தியொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ்விபத்தினைத் தொடர்ந்து குறித்த பாரவூர்தி தீப்பிடித்து எரிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் 3 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பேருந்து பாரவூர்தியுடன் மோதி விபத்து – 22 பேர் காயம்..!

நிட்டம்புவ - கிரிந்திவெல பிரதான வீதியில் இன்று (4/21/2025) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் 22 பேர் காயமடைந்துள்ளனர். இராணுவ வீரர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, எதிர் திசையிலிருந்து வந்த பாரவூர்தியுடன் மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். விபத்தில் காயமடைந்தவர்கள் வத்துபிட்டிவெல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், அதில் 20 பேர் சிகிச்சை நிறைவடைந்த பின்னர் வைத்தியசாலையிருந்து...

பாரவூர்தி இரண்டு ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து!

அனுராதபுரம் ஏ-9 வீதியில் நேற்று இடம்பெற்ற விபத்தில் நபரொருவர் படுகாயமடைந்துள்ளார். காயமடைந்தவர் யாழ்ப்பாணம் - சாகவச்சேரியைச் சேர்ந்த 44 வயதுடையவர் எனத் தெரியவந்துள்ளதுடன் விபத்தில் குறித்த நபரின் கால் அகற்றப்பட்டுள்ளது. கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த பாரவூர்தி வேகக் கட்டுப்பாட்டை இழந்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு பாரவூர்தி மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்நிலையில் விபத்தில் படுகாயமடைந்த நபர் சிகிச்சைகளுக்காக...

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற  பாரிய விபத்து!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கௌனிகம பகுதியில் இன்று (01) காலை இடம்பெற்ற விபத்தில் நான்கு பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒரு பாரவூர்தி இரண்டு வேன்கள் மற்றும் ஒரு மகிழுந்து ஒன்றோடொன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இந்த விபத்தினால் அதிவேக நெடுஞ்சாலையில் போக்குவரத்திற்கு எந்தத் தடையும் இல்லை எனத் தெரியவந்துள்ளது. காயமடைந்தவர்களின் நிலை கவலைக்கிடமாக...

மணல் ஏற்றிச்சென்ற பாரவூர்தி ஆழமான பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து!

கண்டி - மாத்தளை ஏ9 வீதியில் இன்று காலை மணல் ஏற்றிச்சென்ற பாரவூர்தி ஒன்று 60 அடி ஆழமான பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது . இவ்விபத்தில் பாரவூர்தியின் சாரதி காயமடைந்து மாத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். கண்டியிலிருந்து கட்டுகஸ்தோட்டை நோக்கி பயணித்து கொண்டிருந்த பாரவூர்தியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. சாரதிக்கு தூக்க கலக்கம் ஏற்பட்டதன் காரணமாகவே இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக...

பாரவூர்தி – மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியதில் இளைஞன் உயிரிழப்பு..!

பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பளை, கரந்தாய் பகுதியில் நேற்றைய தினம் (14.03.2025) நள்ளிரவு 11.50 மணியளவில் யாழ்ப்பாணத்தில் இருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த பாரவூர்தியும்  கிளிநொச்சி பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும் ஒன்றுடன் ஒன்று நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் பயணித்தவரே சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக...

அத்துமீறி பயணித்த பாரவூர்தி மீது துப்பாக்கிப் பிரயோகம்!

யாழ்ப்பாணம் பருத்தித்துறை பொன்னாலை பகுதியில் நேற்று (02) பிற்பகல் அத்துமீறி பயணித்த பாரவூர்தி மீது காவல்துறையினர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். சட்டவிரோதமாக மணல் கடத்திச் சென்ற பாரவூர்தியை நிறுத்த காவல்துறையினர் பலமுறை சமிஞ்சை செய்த போதிலும், பாரவூர்தியை நிறுத்தாமல் சென்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதன் காரணமாக காவல்துறையினர் குறித்த பாரவூர்தி மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். இத் துப்பாக்கிச் சூட்டில்...

யாழில் மணல் ஏற்றிச் சென்ற பாரவூர்தி மீது பொலிஸார் துப்பாக்கி பிரயோகம்..!

யாழ்  வல்வெட்டித்துறையில் மணல் ஏற்றிச் சென்ற பாரவூர்தி மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். மேலும் சம்பவம் தொடர்பில் மணல் ஏற்றிச் சென்ற பாரவூர்தியை பொலிஸார் நிறுத்த  உத்தரவிட்டும் ஓட்டுநர் நிறுத்த மறுத்துள்ளார். வாகனத்தை நிறுத்த மறுத்த நிலையில் பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி  ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அந்த பாரவூர்தியில்  மணலில் மறைத்து...

ஆறு கழுதைகளை ஏற்றிச் சென்ற சாரதிகள் கைது!

அனுமதியின்றி ஆறு கழுதைகளை ஏற்றிச் சென்ற பாரவூர்தி சாரதிகள் இருவர் இன்று (26) கைது செய்யப்பட்டுள்ளனர். கந்தகுளிய பகுதியைச் சேர்ந்த இரண்டு பாரவூர்தி சாரதிகளே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த பகுதியில் உள்ள கழுதைகளை கற்பிட்டி பிரதேச செயலாளரின் அனுமதியின்றி வேறு பகுதிக்குக் கொண்டு செல்வது சட்டவிரோதமானது என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது,...
- Advertisement -spot_img

Latest News

நாளை காலை முதல்வராக பதவியேற்கும் விஜய்!

தவெக தலைவர் விஜய்யை ஆட்சி அமைக்க வருமாறு ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார். இதற்கமைய நாளை காலை 10 மணிக்கு விஜய் முதல்வராக பதவி ஏற்க உள்ளார் என...
- Advertisement -spot_img