கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவம் தொடர்பில் நீதிமன்ற வளாகத்தில் உள்ள நீதிமன்ற அறைகளை சுட்டிக்காட்டி கொலைக்கு ஆதரவளித்த மற்றுமொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகளால் மாதம்பிட்டிய காவல்துறை பிரிவில் வைத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்ட நபர் 23 வயதுடைய எனத் தெரிவிக்கப்படுகிறது.

கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவம் தொடர்பில் இதுவரை 14 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here