புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் உள்ள 5 ஆம் இலக்க நீதவான் நீதிமன்றத்திற்கு கணேமுல்ல சஞ்சீவவை சுட்டுக் கொலை செய்வதற்காக, வழக்கறிஞர்களாக வேடம் தரித்த ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் வருகை தந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகத்தில் இன்று (19/02/2025) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போது ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க இதனைத் தெரிவித்துள்ளார்.
வழக்கறிஞராக வேடம் தரித்த நபர் நீதிமன்றத்திற்குள் வெறுங்கையுடன் நுழைந்துள்ளதாகவும் பின்னர் சம்பந்தப்பட்ட பெண்ணிடமிருந்து துப்பாக்கியை பெற்றுக்கொண்டுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.








