யாழ்ப்பாணத்தில், விவசாய ஆராய்ச்சி குறித்து உரையாடிக்கொண்டிருந்த ஆராய்ச்சியாளர் மயங்கி விழுந்த நிலையில் நேற்றையதினம் உயிரிழந்துள்ளார். கோப்பாய் – கட்டைப்பிராய் பகுதியைச் சேர்ந்த பொன்னுத்துரை ரவிச்சந்திரநேசன் (வயது 58) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

இவர் கடந்த 13 ஆம் திகதி கனடாவில் இருந்து யாழ்ப்பாணம் வந்துள்ளார். இவர் கனடா பல்கலைக்கழகத்தில் ஒரு விவசாய ஆராய்ச்சியாளராக உள்ளார். அந்தவகையில் நேற்று நள்ளிரவு பல்கலைக்கழக விரிவுரியாளருடன் ஜும் (zoom) தொழில்நுட்பமூடாக ஆராய்ச்சி குறித்து கலந்துரையாடிக் கொண்டிருந்தார். இதன்போது திடீரென மயங்கி கீழே விழுந்தார்.

இந்நிலையில் அவரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பித்தவேளை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரணம் விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

[யாழ் நிருபர் – இரட்னசிங்கம் முரளிதரன்]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here