யாழ்.குடாநாட்டில் கன மழை பெய்து வரும் நிலையில், தென்மராட்சி பிரதேசத்தின் நெற்பயிற்செய்கை நிலங்கள் முற்றாக நீரில் மூழ்கியுள்ளன.

எழுதுமட்டுவாழ், மிருசுவில், கரம்பகம், மந்துவில், மீசாலை, சரசாலை, மட்டுவில், அல்லாரை, கச்சாய், கைதடி, நாவற்குழி, தச்சன்தோப்பு மற்றும் தனங்களப்பு நெல் வயல் நிலங்கள் நீரில் முழ்கியுள்ளன.

வெள்ளத்தால், சரசாலை, மட்டுவில், மிருசுவில், கொடிகாமம், அல்லாரை, கைதடி, நாவற்குழி ஆகிய பிரதேசங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

கால்நடைகள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளன. கால்நடை வளர்ப்பாளர்கள் தமது கால்நடைகளை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

கன மழை காரணமாக தென்மராட்சி பிரதேசத்தில் 1,303 குடும்பங்களைச் சேர்ந்த 4,156 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் 205 குடும்பங்களைச் சேர்ந்த 728 பேர் தற்காலிக முகங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் 11 இடைத்தங்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கொடிகாமம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் 50 குடும்பங்களை சேர்ந்த 168 பேரும், போகட்டி அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் 47 குடும்பங்களைச் சேர்ந்த 281 பேரும், நாவற்குழி – சீயோன் தேவாலயத்தில் 32 குடும்பங்களைச் சேர்ந்த 100 பேரும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கான சமைத்த உணவை பொது அமைப்புகள், பிரதேச இளைஞர்கள் இணைந்து வழங்கி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here