மத்திய மேற்கு வங்காள விரிகுடாவில் உருவான ‘அர்னாப்’  சூறாவளி, இந்தியாவின் ஆந்திரப் பிரதேச கடற்கரையில் கரையைக் கடக்கத் தொடங்கியுள்ளதால், இலங்கையின் வானிலையில் அதன் தாக்கம் படிப்படியாகக் குறைந்து வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வானிலை ஆய்வுத் திணைக்களத்தின்படி, இன்று (28) மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், ஊவா மாகாணத்திலும், மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் ஒரு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், திருகோணமலை மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here