முன்னாள் நீதித்துறை அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் மகனான ரகித ராஜபக்ஷவுக்கு சொந்தமான பல வங்கிக் கணக்குகளை இடைநிறுத்த இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

குற்றத்தின் மூலம் ஈட்டப்பட்ட சொத்துக்கள் தொடர்பான சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தற்போது நடைபெற்று வரும் விசாரணை தொடர்பாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த விசாரணையின் ஒரு பகுதியாக குறித்த வங்கிக் கணக்குகளை இடைநிறுத்துவது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு கடிதத்தை கையளிப்பதற்காக இலஞ்ச ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழு ஒன்று நாவலவில் உள்ள ரகித ராஜபக்ஷவின் வீட்டிற்கு சென்றுள்ளது.

எவ்வாறாயினும், இலஞ்ச ஆணைக்குழு அதிகாரிகள் குறித்த அறிவிப்பை வழங்க சென்றபோது ரகித ராஜபக்ஷ வீட்டில் இல்லை என ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here