ஒக்டோபர் மாதத்திற்கான முதியோர் கொடுப்பனவு இன்று (29) முதல் பயனாளிகளின் அஸ்வெசும வங்கிக் கணக்குகளுக்கு வரவு வைக்கப்பட உள்ளது.
இதற்கமைய, அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு திட்டத்தின் முதல் கட்டத்தின் கீழ் 70 வயதுக்கு மேற்பட்ட 616,362 முதியவர்களுக்கு 3,081,810,000 ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும், அத்திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ் 70 வயதுக்கு மேற்பட்ட 79,520 முதியவர்களுக்கு 397,600,000 ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இரண்டு கட்டங்களின் கீழ் 695,882 முதிய பயனாளிகளுக்காக ஒக்டோபர் மாதத்திற்கு செலுத்தப்பட வேண்டிய மொத்த தொகை 3,479,410,000 ரூபா ஆகும்.
குறித்த பயனாளிகள் இன்று (29) முதல் தங்களது அஸ்வெசும வங்கிக் கணக்குகள் மூலம் முதியோர் கொடுப்பனவை பெற்றுக்கொள்ள முடியும்.








