கற்பூரவள்ளி மசாலா டீயின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. செய்து ருசியுங்கள்.

தேவையான பொருட்கள்

  • கற்பூரவள்ளி இலைகள் – 8
  • ஏலக்காய் – 2
  • மிளகு – 10
  • இஞ்சி – 2 துண்டு
  • பால் – 1 டம்ளர்
  • தண்ணீர் – 1 1/2 டம்ளர்
  • மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
  • டீத்தூள் – 2 டீஸ்பூன்
  • சர்க்கரை – 4 டீஸ்பூன்

செய்முறை

  • முதலில் கற்பூரவள்ளி இலைகளை நீரில் நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.
  • பின்னர் இடிக்கும் உரலில் ஏலக்காய், மிளகு சேர்த்து நன்கு பொடித்துக் கொள்ள வேண்டும்.
  • பின்பு அதில் இஞ்சியை சேர்த்து நன்கு தட்டிக் கொள்ள வேண்டும்.
  • அடுத்து ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் பாலை ஊற்றி, அதில் 1 1/2 டம்ளர் நீரை ஊற்றிக் கொள்ள வேண்டும்.
  • பின் அதில் கற்பூரவள்ளி இலைகளை பிய்த்து போட வேண்டும்.
  • பிறகு அதில் மஞ்சள் தூள் சேர்த்து அடுப்பில் வைக்க வேண்டும்.
  • பின் அதில் டீத்தூளை சேர்த்து, தட்டி வைத்துள்ள மசாலா பொருட்களை சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
  • டீ நன்கு பொங்கி வந்த பின், மிதமான தீயில் வைத்து 5 நிமிடம் டீயை கொதிக்க வைக்க வேண்டும்.
  • 5 நிமிடம் நன்கு கொதித்த பின், மீண்டும் தீயை அதிகரித்து ஒருமுறை பொங்கி வந்ததும், அதில் சர்க்கரை சேர்த்து கிளறி இறக்கி வடிகட்டினால், சுவையான கற்பூரவள்ளி மசாலா டீ தயார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here