கிளிநொச்சி மாவட்ட ஆவணி மாததிற்கான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்றைய தினம் நடைபெற்றது.

குறித்த கலந்துரையாடல் கடற்தொழில் அமைச்சரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

குறித்த மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் அவர்களின் வரவேற்புரையுடன் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

யாழ் – கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் அவர்கள் இக் கலந்துரையாடலில் கலந்து கொண்டிருந்தார்.

இதன்போது மத்திய மற்றும் மாகாண அமைச்சுக்களால் கிளிநொச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டதுடன், அவை தொடர்பான விடயங்கள் விரிவாக ஆராயப்பட்டன.

இதனைவிட புதிய முன்மொழிவுகளுக்கான அனுமதிகளும் பெறப்பட்டன. மேலும் கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெறும் பல்வேறு சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்த விசேட திட்டங்களை வகுத்தல் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டன.

இக் கலந்துரையாடலில் வடக்கு மாகாண பிரதம செயலாளர், வட மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், மேலதிக அரசாங்க அதிபர்(காணி), பிரதேச செயலாளர்கள் என பலர் கல்ந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here