பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை கைது செய்து ஆஜர்படுத்துமாறு கோட்டை நீதவான் தனுஜா லக்மாலி உத்தரவிட்டுள்ளார்.
கோட்டை நீதவான் இன்று புதன்கிழமை இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
கொழும்பு நிப்போன் ஹோட்டலில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது குர்ஆனையும் இஸ்லாம் மதத்தையும் இழிவுபடுத்தும் வகையில் ஊடகங்களுக்கு தவறான மற்றும் பொய்யான அறிக்கைகளை வெளியிட்டதாக இவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பிலான விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜராகாதமையால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.







