திருகோணமலை கல்மெட்டியாவ குளத்தில் நீராடச் சென்ற இளைஞன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக திருகோணமலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
திருகோணமலையிலிருந்து குடும்பத்தாருடன் கல்மெட்டியாவ குளத்துக்கு சுற்றுலா சென்ற போது நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரியவருகின்றது.
இவ்வாறு உயிரிழந்த இளைஞன் திருகோணமலை பொது வைத்தியசாலையில் கடமையாற்றி வரும் சாரதியின் மகனாவார்.
உயிரிழந்தவரின் சடலம் கந்தளாய் வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விசாரணைகளை தம்பலகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.








