கொச்சிக்கடை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தலுவாகொட்டுவ பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 4,210 போதை மாத்திரைகளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிடைத்த தகவலின் அடிப்படையில் மேல் மாகாண வடக்கு குற்றப் புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் குழுவினரால் நேற்று (16) இந்த கைது மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சந்தேக நபர் கொச்சிக்கடை பகுதியைச் சேர்ந்த 59 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

மேல் மாகாண வடக்கு பிரிவு குற்றப் புலனாய்வு பிரிவினரால் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here