நடிகர் நாக சைதன்யா மற்றும் நடிகை சோபிதா துலிபாலாவுக்கு இன்று நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ள நிலையில் தனது நிச்சயதார்த்த புகைப்படங்களை வெளியிட்டு நாக சைதன்யா இதனை உறுதி செய்துள்ளார்.
மிக விரைவில் திருமண செய்தி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
நடிகர் நாக சைதன்யா மற்றும் நடிகை சோபிதா துலிபாலாவுக்கு இன்று நிச்சயதார்த்தம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகி டோலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகை சமந்தா அறிமுகமான ஹே மாய சேசாவே படத்தில் இணைந்து நடித்த நாக சைதன்யா அவரை உருகி உருகி காதலித்து வந்த நிலையில் இருவரும் 2017ம் ஆண்டு திருமணம் செய்து பின்னர் 2021ம் ஆண்டு இருவரும் விவாகரத்து செய்து பிரிந்துள்ளனர்.
நாக சைதன்யா மற்றும் சமந்தா தம்பதியினருக்கு குழந்தை பிறக்கவில்லை என்பதும் இருவரது பிரிவுக்கு காரணமாக இருக்கும் என சொல்லப்பட்டது.
இந்நிலையில், சோபிதா துலிபாலாவை நடிகர் நாக சைதன்யா நிச்சயம் செய்துக் கொள்ளப் போவதாகவும் இந்த ஆண்டு இறுதியில் திருமணம் நடைபெறும் என தகவல்களும் கசிந்துள்ளன.








