காட்டு யானைத் தாக்குதலுக்கு இலக்கான கடற்படை அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கடற்படை உத்தியோகத்தர் அருகிலுள்ள கடையொன்றில் உணவுப் பொதியை வாங்கிக்கொண்டு முகாமுக்குத் திரும்பிக் கொண்டிருந்த நேற்றிரவு காட்டு யானைத் தாக்குதலுக்கு இலக்கானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அநுராதபுரம், புனேவ கடற்படை முகாமில் கடமையாற்றும் அதிகாரி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நிட்டம்புவ பகுதியை 41 வயதுடைய கடற்படை அதிகாரியே காட்டு யானைத் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.

வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here