மிஹிந்தலை – திருகோணமலை வீதியில் மஹாகனதராவ வாவிக்கு அருகில் காட்டு யானை தாக்கி பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் காயமடைந்துள்ளதாக மிஹிந்தலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் இன்று வியாழக்கிழமை (12) இடம்பெற்றுள்ளது.
அநுராதபுரம், உடமலுவ பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 54 வயதுடைய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரே இவ்வாறு காயமடைந்துள்ளார்.
இந்த பொலிஸ் உத்தியோகத்தர் தனது வீட்டிலிருந்து மோட்டார் சைக்கிளில் கடமைக்குச் சென்றுகொண்டிருக்கும் போது காட்டு யானை தாக்கி காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து, காயமடைந்தவர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.








